பொதுமக்கள் கவனத்திற்கு.. ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
2023 August month Bank 14 days holiday
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.
2023 ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்:
ஆகஸ்ட்- 6 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்- 8 - டெண்டாங் லோ ரம் ஃபாத் (கேங்டாக்)
ஆகஸ்ட்- 12 - 2வது சனிக்கிழமை
ஆகஸ்ட் - 13 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்- 15 - சுதந்திர தினம்
ஆகஸ்ட்- 16 - பார்சி புத்தாண்டு (பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்)
ஆகஸ்ட்- 18 - ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (கவுகாத்தி)
ஆகஸ்ட்- 20 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்-26 - 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் - 27 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் - 28 - முதல் ஓணம் (கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)
ஆகஸ்ட் - 29 - திருவோணம் (கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)
ஆகஸ்ட் - 30 - ரக்சா பந்தன் (ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகர்)
ஆகஸ்ட் - 31 - ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல் (கேங்டாக், டேராடூன், கான்பூர், கொச்சி, லக்னோ மற்றும் திருவனந்தபுரம்)
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
2023 August month Bank 14 days holiday