வயநாடு பேரிடர் : 206 பேரை காணவில்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை..!! - Seithipunal
Seithipunal



கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29ம் தேதி இரவு பெய்த தொடர் கனமழையால், ஜூலை 30ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அனைவரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தால் பல நூறு குடும்பங்கள் மண்ணில் புதைந்துள்ளன. 

தொடர்ந்து வயநாட்டில் கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 5வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கி Life Rescue Radar கருவியின் உதவியுடன் மீட்புப் பணிகளை தீவிரப் படுத்தியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "இதுவரை 215 சடலங்களை மீட்டுள்ளோம். அவர்களில் 87 பேர் பெண்கள், மற்றும் 98 பேர் ஆண்கள், 30 குழந்தைகளின் சடலங்கள் உள்ளன. 148 உடல்களை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் 206 பேரை காணவில்லை. 

மேலும் காயமடைந்துள்ள 81 பேரை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம். சாலியாற்றில் தான் அதிக சடலங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவற்றில் 67 சடலங்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு உள்ளது. அந்த சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் பணியை பஞ்சாயத்துக்கள் வசம் ஒப்படைத்துள்ளோம். 

தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, வனத்துறை, காவல்துறை, ராணுவம், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என மொத்தம் 1, 419 பேர் அடங்கிய குழுவினர் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

206 Peoples Missing In Wayanad Disaster Pinarayi vijayan Said


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->