தெலங்கானாவில் புலி தாக்கி 21 வயது பெண் உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தின் குமரம்பீம் அசிஃபாபாத் மாவட்டம் கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது லட்சுமி, வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில், புலி அவரது கழுத்தை கடித்து விட்டது. அருகிலிருந்தவர்கள் அலறி ஓடியதால், புலி வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. பலத்த காயங்களுடன் காகஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு லட்சுமியை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சோக சம்பவத்துக்குப் பிறகு, கிராம மக்கள் காகஜ்நகர் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையின் அலட்சியமே இதற்குக் காரணமாக உள்ளது என்றும், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வனத்துறையினர், உயிரிழந்த லட்சுமியின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குவதோடு, புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை முடித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் புலி தாக்குதலுக்கான அச்சம் நிலவுகிறது. கிராம மக்கள் பாதுகாப்புக்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கும்படி வனத்துறையினரை கோரியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 year old woman killed in tiger attack in Telangana Villagers protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->