மோடியின் பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற 24 மாணவர்கள் கைது..!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி குறித்தான இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மோடி குறித்தான ஆவண திரைப்படம் திரையிடப்படுகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் குஜராத் கலவரம் குறித்தான பிபிசி ஆவண திரைப்படம் திரையிட முயற்சி செய்த 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாணவர்களாவர். 

இதன் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாத வகையில் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை பல்கலைக்கழகத்தில் குஜராத் கலவரம் குறித்தான ஆவணப்படம் திரையிட இந்திய மாணவர்கள் சங்கத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பல்கலைகழகத்தில் குஜராத் கலவரம் குறித்தான ஆவணப்படம் திரையிடக்கூடாது என துணைவேந்தர் கவுரி தடை விதித்ததை அடுத்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அதனையும் மீறி இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் நிருபன் தலைமையிலான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றில் மோடி குறித்தான ஆவண படத்தை திரையிட்டு காட்டினார். அப்பொழுது சிலர் மாணவர்களுடன் தடை செய்யப்பட்ட படத்தை பார்க்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 students arrested for trying to screen BBC documentary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->