ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் - இஸ்ரோவின் 100 வது செயற்கைகோளின் கவுண்டவுன் ஆரம்பம்.!  - Seithipunal
Seithipunal


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தவுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ, தனது 100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வரலாறு படைக்க தயாராகி வருகிறது. 

இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 6.23 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

அதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இஸ்ரோ விஞ்சானிகள் தெரிவித்துள்ளதாவது:- "என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள், மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும். ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது" என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

25 hours countoun start in gslv f 15 rocket in sri harikotta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->