தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகளின் கதி என்ன?
fire accident in thanjavur raja mirasuthar hospital in thanjavur
தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த கர்ப்பிணி பெண்கள் அலறித் துடித்தனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து கட்டிடம் முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
உடனே இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ விபத்தில் சிக்கிய கர்ப்பிணிகள், குழந்தைகளை மீட்டு வேறு கட்டிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:-
"தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நலமாக உள்ளனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.
English Summary
fire accident in thanjavur raja mirasuthar hospital in thanjavur