பிஹாரில் புதிய திட்டங்கள் பல தொடங்கி வைத்தார் ..!- பிரதமர் நரேந்திர மோடி
He launched many new projects in Bihar Prime Minister Narendra Modi
பீகார் மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுபானிக்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அங்கு 4 ரெயில்கள் சேவையை இனிதாக தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி:
அதுமட்டுமின்றி, ரூ.13,500 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.மேலும், சஹர்சா- மும்பை இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜெய்நகர்- பாட்னா, பிப்ரா- சஹர்சா, சஹர்சா- சமாஸ்திபூர் இடையில் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
மேலும், பல ரெயில் தடங்களையும் தொடங்கி வைத்தார். இதனை ககாரியா-அலாலி ரெயில் வழித்தடத்தை நாட்டுக்கு அற்பணித்தார்.
மேலும்,ரூ.340 கோடி மதிப்பிலான ரெயில் பாதையிலிருந்து நேரடியாக கொண்டு வரும் வசதியுடன் கூடிய எல்.பி.ஜி. ஆலைக்கு (சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்புதல்) அடிக்கால் நாட்டினார்.
இதனுடன், மின்சாரத் துறை தொடர்பாக ரூ.1,170 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும்.ரூ.5,030 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்.இது தற்போது இணையத்தில்,பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
He launched many new projects in Bihar Prime Minister Narendra Modi