இன்றைய வரலாறு.. விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.

கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.

துப்பாக்கியும், புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.

இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.

ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 1931ஆம் ஆண்டு ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.

அபினவ் பிந்த்ரா

இந்திய தொழிலதிபரும், ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான அபினவ் பிந்த்ரா 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள தேராதூன் மாவட்டத்தில் பிறந்தார்.

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை பெற்றவர்களில் முதல் இந்தியர் ஆவார்.


முக்கிய நிகழ்வுகள்

உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு, மக்களிடம் பசுமையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவே செப்டம்பர் 28ஆம் தேதி பசுமை நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.

ரேபிஸ் எனும் வைரஸ் நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியே உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது

1928ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அலெக்சாண்டர் பிளெமிங் பென்சிலினைக் கண்டுபிடித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 September history Indian freedom fighter bhagat singh birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->