கொடூர சம்பவம்: சிறுமியை கடத்தி 5 நாட்கள் பலாத்காரம் - 3 பேர் கைது - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை கடத்திச் சென்று ஐந்து நாட்கள் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 6ஆம் தேதி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை மர்மகும்பல் கடத்திச் சென்றுள்ளது. இதையடுத்து கடத்திச் சொல்லப்பட்ட சிறுமியின் சகோதரர் இதுகுறித்து மிர்காஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தீவிர தேடுதல் நடவடிக்கை பிறகு சிறுமையை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காஷிப்பூர் பகுதியில் போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமி மயக்க நிலையில் இருந்ததாகவும், போதை பொருள் கொடுத்து ஐந்து நாட்கள் சிறுமியை மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி, வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 arrested for Girl kidnapped and raped for 5 days in uttarakhand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->