மும்பை விமான நிலையம்: ரூ.1½ கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் - 3 பயணிகள் கைது - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் ரூபாய் ஒன்றரை கோடி வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூன்று பயணிகளை கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள், மும்பை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பயணிகளின் ட்ராலி பேக்கை சோதனை செய்ததில், அதிக அளவில் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மூன்று பயணிகளிடம் இருந்த 57,900 யூரோ, 4 லட்சத்து 42 ஆயிரத்து 300 திராம்களை (இந்திய பண மதிப்பில் ரூபாய் ஒன்றரை கோடி) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல இருந்த மூன்று பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த கடத்தல் சம்பந்தமாக மூன்று பேரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 passengers arrested for trying to smuggle Foreign Currency in Mumbai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->