மகாராஷ்டிராவில் கோர விபத்து: அப்பளம் போல் நொறுங்கிய 48 வாகனங்கள்.! 30 பேர் காயம்
30 people injured 48 Vehicles Damaged in Accident on Maharashtra
மகாராஷ்டிரா மாநிலம் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவலே பாலத்தில் அருகே சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களின் மீது மோதியது. இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புனே தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் டேங்கர் லாரி ஒன்றின் பிரேக் செயல் இழந்ததால் இரவு 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் டேங்கர் லாரி இருந்து எண்ணெய் கசிந்ததால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறி மற்ற வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக பாலத்தில் 48 வாகனங்கள் அப்பளம் போல் நசுங்கி கிடக்கிறது. மேலும் இந்த விபத்தால் மும்பை செல்லும் நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
English Summary
30 people injured 48 Vehicles Damaged in Accident on Maharashtra