30 சதவீத பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் - அரசு தகவல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் திருமணத்திற்கான வயதாக பெண்களுக்கு  18 -ம் , ஆண்களுக்கு 21 -ம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளநிலையில், மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகளவில் பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதாக புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் 50.2 சதவீதமும், ஜார்க்கண்டில் 48.8 சதவீத பெண்களும்  21 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் டெல்லியில் இந்த சதவீதம் 15.5 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் 30 சதவீத பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  

இதையடுத்து இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் அதாவது, ஜம்மு காஷ்மீரில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 26 ஆக உள்ள நிலையில், அங்கு 21 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் 8.2 ஆக உள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 24.4 ஆக இருந்து வருகிறது. இந்த விகிதம் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் 21 ஆகவும், ஒடிசாவில் 22 ஆகவும் மிகக் குறைவாக இருந்தது. 

கடந்த 2020-ம் ஆண்டில் கேரளா மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட திருமணம் எதுவும் இல்லை. ஆனால், 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை பீகாரை போல 72.6 சதவீதமாக உள்ளது. மொத்தத்தில் இந்தியா முழுவதும் 70.5 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்கு மேல் திருமணம் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விபரத்தில், ஜம்மு காஷ்மீரில் 90.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக குஜராத்தில் 85.2 சதவீதம், உத்தரகாண்டில் 84 சதவீதம், பஞ்சாபில் 83 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 82.7 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், நகர்ப்புறங்களில் 18.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. 18 வயதிற்குட்பட்ட திருமணங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மேற்குவங்கம் உள்ளது. ஒடிசா, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இந்த சதவீதம் மூன்றிற்கும் அதிகமாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 percentage girls 21 years marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->