ஆசிய காது கேளாதோர் போட்டியில் தக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு..!
The Deputy Chief Minister congratulated the athletes of Tamil Nadu deservedly won the Asian Deaf Games
10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் 14 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். இது குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
![](https://img.seithipunal.com/media/kaathu kelothar-9dmfm.jpg)
மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டி 2024-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 04 தங்கம், 06 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நம் வீரர் - வீராங்கனையரை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம். இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த அவர்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம். என தெரிவித்துள்ளார்.
English Summary
The Deputy Chief Minister congratulated the athletes of Tamil Nadu deservedly won the Asian Deaf Games