பெற்ற 2 குழந்தைகளை தவிக்கவிட்டு 15 சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 30 வயது பெண்.! - Seithipunal
Seithipunal


கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு 15 வயது சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே தெருவை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சிறுவன் தனது நண்பனை சந்திக்க செல்வதாக வீட்டில் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். 

ஆனால் சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே தெருவில் இருந்த 30 வயது இளம்பெண்ணும் காணாமல் போனதால் அவர் மீது சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஐதராபாத் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 

அங்கு பாலா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுவனுடன் இளம்பெண் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளிக்கு சென்று வரும்போது சிறுவனை மயக்கி அவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும், கணவர் மற்றும் குழந்தைகள் இடையூறாக இருந்ததால் சிறுவனை கடத்தி வந்ததாக போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 years old women escape 15 years old boy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->