30 வயதை தாண்டியும் கல்யாணம் ஆகாமல் தவித்த வாலிபர்கள்.! மணமகளைத் தேடி பாதயாத்திரை.!
30year old unmarried teenagers padayatra for marriage
சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், ஏராளமான இளைஞர்கள் தவிப்பதாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்.
அதன் படி, அவர்கள் அனைவரும் மணப்பெண் கிடைப்பதற்காக சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல தீர்மாணித்து உள்ளனர். இந்தக் கோவில் மாண்டியா தாலுக்காவில் இருந்து சுமார் 105 கி.மீ தொலைவில் உள்ளது.
இதையடுத்து, இந்த கோவிலுக்கு அவர்கள் அனைவரும் மணமகள் வேண்டி மூன்று நாட்கள் பாத யாத்திரையாக நடந்து செல்ல உள்ளனர். அவ்வாறு செல்லும் இந்த பாத யாத்திரைக்கு "பிரம்மாச்சாரிகள் பாதயாத்திரை" என்று பெயரிடப்பட்டுள்ளது.
வருகிற 23-ந் தேதி தொடங்க உள்ள இந்த பாதயாத்திரையில் முப்பது வயதுக்கு மேற்பட்ட சுமார் 200 திருமணமாகாத இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்கு இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தில் மூன்று வேளை உணவும், தங்கும் இடங்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
30year old unmarried teenagers padayatra for marriage