ஒட்டு போடாவிட்டால் அபராதம் - வைரலாகும் பதிவு.!
350 fine collected for not voting in parliment election
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும், வாக்காளிக்காவிட்டால், வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியைக் கேட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB FACT CHECK அமைப்பு, ‘இது தவறான தகவல் என்றும் தேர்தல் ஆணையம் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
350 fine collected for not voting in parliment election