மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து..! 4 பேர் பலி, 3 பேர் காயம்...!
4 killed 3 injured as chemical tanker explodes on Mumbai Pune expressway
மும்பை-புனே விரைவுச் சாலையில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி பாலத்தில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்தினால் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து காலை 11 மணியளவில் லோனாவாலா மற்றும் கண்டாலா இடையே இந்த விபத்து நிகழ்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, மும்பை-புனே நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் நிவாரணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 killed 3 injured as chemical tanker explodes on Mumbai Pune expressway