காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் - 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தைch சேர்ந்தவர் வம்சி. இவருக்கும் சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நெருக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வம்சி மாணவியை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார். 

இந்த நிலையில் இருவரும் வழக்கம் போல் வெளியே சென்ற போது மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து, அதனை தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை வம்சி தனது நண்பர்கள் 3 பேரிடம் காட்டியதையடுத்து அவர்கள் அந்த மாணவியை தங்களுக்கும் விருந்தாக்கும்படி வம்சியிடம் கேட்டனர். 

இதற்கு சம்மதம் தெரிவித்த வம்சி, தனது காதலியான சட்டக்கல்லூரி மாணவியை விசாகப்பட்டினம் அருகே கிருஷ்ணா நகரில் உள்ள நண்பனின் அறைக்கு அழைத்து வந்து வற்புறுத்தி பலாத்காரம் செய்தனர். நாளுக்கு நாள் அவர்களது தொல்லை தாங்கமுடியாத அந்த மாணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

உடனே அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து வம்சி மற்றும் அவருடைய மூன்று நண்பர்களையும் கைது செய்தனர். காதலியை தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 peoples arrested for harassment case in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->