கொரோனா தொற்று: இந்தியாவில் ஒரே நாளில் 40 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்பொழுது ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. இதில் நேற்று 7 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7,171 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் கேரளாவில் 15 பேர், டெல்லியில் 6 பேர், உத்தரபிரதேசத்தில் 4 பேர், சத்தீஸ்கரில் 3 பேர், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 பேர், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் சண்டிகரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,314 ஆக குறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 people died in one day due to corona in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->