கொச்சி விமான நிலையம் : ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!
48 lakhs worth gold seized in kochi airport
கொச்சி விமான நிலையத்தில் ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாயில் இருந்து வந்த காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் மற்றும் அப்துல்லா ஆகிய இரண்டு பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், ஜூஸ் பாட்டில் மற்றும் வாயில் மறைத்து வைத்து 250 கிராம் எடையுள்ளnதங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்களிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரண்டு பேரையும் கைது செய்தனர்.
இதேபோல், குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கொல்லத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில், 700 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 3 பயணிகளிடமிருந்த 48 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பந்தமாக தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
48 lakhs worth gold seized in kochi airport