4ம் கட்டத் தேர்தல்; 10 மாநிலங்களில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது.!!
4th phase Loksabha and Andhra Pradesh election campaign end today
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவைப் பொது தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நான்காம் கட்ட வாக்கு பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த வெளி நபர்கள் இன்று மாலை 6 மணியுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டப்பேரவை பொது தேர்தலும் நடைபெறுகிறது.
ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டியும், ஒய்.எஸ்.ஆர் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பாஜக உடன் கூட்டணி வைத்து சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
4th phase Loksabha and Andhra Pradesh election campaign end today