பீகாரில் அதிர்ச்சி.! கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் விஜய் பஜாரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் கேதார் லால் குப்தா. இவர் 10 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்கி இருந்தார். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கேதார் லால் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுமி மட்டும் ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விஷம் குடிப்பதற்கு முன்பு கேதரின் மகன் அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், மார்க்கெட்டில் உள்ள சிலரிடம் அப்பா பணம் கடன் வாங்கி இருந்ததால் அவர்கள் அதை வசூலிக்க தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள். அதனால் எல்லா பிரச்சனையில் இருந்தும் விடுபட விஷம் குடித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 members of the same family committed suicide in Bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->