வெடித்து சிதறிய கண்ணாடி தொழிற்சாலை - 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானாவில் கண்ணாடி தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரெங்காரெட்டி மாவட்டம் பர்குலா கிராமத்தில் சவுத் கிளாஸ் பி.லிட்., என்ற கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில், வணிக பயன்பாடுகளுக்கான பல்வேறு ரக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,நேற்று கண்ணாடி தொழிற்சாலை வழக்கம் போல் இயங்கியபோது கம்ப்ரசர் டேங்க் திடீரென வெடித்தது. மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த விபத்தின் போது பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுவரைக்கும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி மேலும் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 peoples died and 15 peoples injured mirror factory blast in telungana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->