ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி.! ரூ.96 லட்சத்தை இழந்த 56 வயது நபர்..!
56 year old man lost Rs 96 lakh in online part time job scam in pune
மகாராஷ்டிரா மாநிலம் புனே பாவ்தான்-என்டிஏ சாலையில் உள்ள ராம்பாக் காலனியில் வசித்து வருபவர் 56 வயதான விளம்பரப் படத்தயாரிப்பாளர். இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு பகுதி நேர ஆன்லைன் வேலை வழங்குவதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து பகுதி நேர வேலை வழங்குவதாக வந்த குறுஞ்செய்திக்கு அந்த நபர் பதில் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவரது நம்பிக்கையைப் பெற அவருக்கு வெல்கம் போனஸாக ரூ. 10,000 கொடுத்துள்ளனர். இந்நிலையில், மோசடி கும்பல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் ரூ.96.57 லட்சம் வரை பணத்தை எடுத்துள்ளனர். இதையடுத்து மோசடி கும்பல் அவருடனான தொடர்பைத் துண்டித்துள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த பாதிக்கப்பட்டவர் நபர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 419, 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 சி மற்றும் 66 (டி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
56 year old man lost Rs 96 lakh in online part time job scam in pune