ஆற்றில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற 6 இளைஞர்கள்  உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற சென்ற 6 இளைஞர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் நகரில் கரஸ்ரோட்டா பகுதியில் அப்பகுதி இளைஞர்கள் இளம் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பெரும் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின்னர் இளைஞர்கள் பலரும் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நண்பர்கள் சிலர் சென்றனர் அவர்களில் ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை அறிந்த அருகிலிருந்த மற்றொருவர் அவரை காப்பாற்ற சென்றிருக்கிறார். இதில் அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதேபோன்று தங்களுடைய நண்பர்களை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து 6 பேர் சென்று அவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த  அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களில் சிலர் ஆற்றில் நீந்தி சென்று ஒருவரது உடலை மீட்டனர். மேலும் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஒடிசா தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் அதிரடி விரைவு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேரின் உடல்கள் கிடைக்காததால் இன்றும் தேடும்படி நீடித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 boys killed while trying to save friend drowning in river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->