முடிவில்லாத படுகொலைகள்! நில தகராறு! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கோடரியால் வெட்டி கொலை! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் நில தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் தரன் நகர் கிராமத்தை சேர்ந்தவர் புஷன் குமார். இவர் முன்னாள் ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் இவரது சகோதரருக்கும் இடையே பல வருடங்களாக நில தகராறு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.இது சம்பந்தமாக பூஷன் குமார் தனது தந்தை ஓம் பிரகாஷ் குமாரிடம் தொடர்ந்து தகராதில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தை அன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆத்திரத்தில் இருந்து வந்த  பூஷன் குமார் இரவு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தாய், சகோதரர், மைத்துனர் மற்றும் அவரது 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கோடாரியால் திடீரென சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அனைவருமே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து போது பூஷன்குமார் கோடாலியை காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் 6 மாத குழந்தை உட்பட ஆறு பேரை  கொடூரமாக கோடாரிகள் வெட்டி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு பூஷன் குமார் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர் பூஷன் குமாரை பிடிக்க பல தனி படைகள் அமைத்துள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழு ஆய்வு குழுவிற்கு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் தனது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 members of the same family were hacked to death in a land dispute in Ariana state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->