ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள்; ராணுவ அதிகாரிகள் தெரிவிப்பு..! - Seithipunal
Seithipunal


2024 ஆம் ஆண்டில்  ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 60 சதவீத பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில்  பயங்கரவாதிகள் ஊடுருவும்போது, இந்திய ராணுவம், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. புதுடில்லியில் இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் கூறியதாவது;

இந்தியாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளின் அனைத்து பகுதிகளுக்கும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது.

கடந்த ஆண்டு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் முயன்றது. எனினும் பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சியால், ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், இந்தாண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

60 percent of the terrorists killed in Jammu and Kashmir are Pakistanis


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->