விடுதியில் அடைத்து மாணவி பலாத்காரம்.! இன்ஸ்டா காதலன் உட்பட 7 பேர் கைது - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டா காதலன் உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகள் மற்றும் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் காலடி பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கும், களியக்காவிளை பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஜிம் சாம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அஜின் சாம் நண்பர்களுடன் சேர்ந்து, மாணவியை அழைத்துச் சென்று நெயாற்று கரையில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்துள்ளார். இதையடுத்து ரஜினி சாங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு மறுநாள் மாணவியை அழைத்து வந்து அவரது வீட்டின் அருகே விட்டு விட்டு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாணவியரின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அஜின் சாம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான பூர்ணிமா, தினேஷ், ஸ்ருதி, சித்தார்த், அகிலேஷ் பாபு, ஜிதின் வர்கீஸ் ஆகியோரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people including insta lover arrested for raping in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->