நிறைவடைந்த இடைத்தேர்தல்... தொடங்கிய 7 மாநில வாக்கு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உங்களிடம் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. 

இதில் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு தி.மு.கவின் அன்னியூர் சிவா, பா.ம.க சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி கே.அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். 

பீகாரில் ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் எம்.எல்.ஏ பீமா பாரதி பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏக்கள் திரிணாமல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

உத்தரகாண்ட் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து மங்களூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக மூன்று முறை இருந்த கமலேஷ் மார்ச் மாதம் பா.ஜ.கவில் இணைந்தால் அமர்வாரா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 states Byelection votes counting 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->