டெல்லி : குவைத் தூதரகத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது தூதரக ஊழியர் கைது..!! - Seithipunal
Seithipunal



டெல்லியில் பல்வேறு நாடுகளுக்கும் தனித்தனி தூதரகங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் குவைத் நாட்டுக்கான தூதரகம் டெல்லி சாணக்கியாபூரில் அமைந்துள்ளது. அந்த தூதரகத்தில் அபு பக்கர் என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 70 வயதாகிறது. 

மேலும் அந்த தூதரகத்தில் பராமரிப்பு பணியாளராக 20 வயதான இளம் பெண் ஒருவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண்ணின் கணவர் அபு பக்கர் அந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், கடந்த 2 வருடங்களாக அபு பக்கர் அந்த குவைத் தூதரகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், 20 வயதான அவரது மனைவி அந்த தூதரகத்தில் பராமரிப்பு பணியாளராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், "எனது மனைவி சாணக்கியாபூரில் உள்ள குவைத் தூதரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வேலை பார்த்த போது தூதரகத்தில் பணியில் இருக்கும் 70 வயதான அபு பக்கர் எனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அபு பக்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் அபு பக்கர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 74ன் கீழ் கைது செய்யப் பட்டுள்ளார். தலைநகரத்தில் உள்ள தூதரகத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

70 Year Old Kuwait Embassy Worker Arrested For Molesting 20 Year Old Lady in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->