பூட்டிய வீட்டில் 762 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பூட்டியிருந்த வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் குருகிராமில் உள்ள நானு குர்த் என்ற கிராமத்தில் பூட்டிக் கிடந்த ஒரு வீட்டிற்குள் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது மொத்தம் 762.15 கிலோ போதைப்பொருளை அந்த வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டில் கதவை திறந்தது முதல் உள்ளே நடத்தப்பட்ட முழு சோதனையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் ராம் சிங் என்ற நபரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார். அதில், அந்த வீடு சில ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததாகவும், அங்கு யாரையும் வாடகைக்கு அமர்த்தவில்லை என்பது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

762 kilo drugs seized in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->