ஜார்க்கண்ட் மாநிலத்தில் 77% இட ஒதுக்கீடு! பாஜக கடும் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஸ்.சி பிரிவு மக்களுக்கு 10 சதவீதமும், எஸ்.டி பிரிவு மக்களுக்கு 26 சதவீதமும்,  பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதமும், வழங்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஜார்கண்டில் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன் பின்னர் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அதிகரிக்கும் நடவடிக்கையில் ஆளும் கட்சி இறங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்கான தரவுகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஜார்க்கண்ட் அரசு இறங்கியது. 

அதன் பலனாக அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்புகளின் இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி எஸ்.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 10% இருந்து 12 சதவீதமாகவும், எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 26 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 14 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 12 சதவீதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் என மொத்தம் 77 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. 

மேலும் அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தப்படும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

77% reservation in Jharkhand state BJP strongly opposed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->