ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
8 days bank holiday in June RBI announcement
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஜூன் மாதம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது.
விடுமுறை நாட்களின் பட்டியல்
ஜூன் 2 - மகாராணா பிரதாப் ஜெயந்தி, ஷில்லாங்
ஜூன் 5 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 11 - இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 15: YMA தினம்/ குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்த நாள் / ராஜா சங்கராந்தி, ஐஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்
ஜூன் 19: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 25: நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26: ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
8 days bank holiday in June RBI announcement