தெருநாய்க்கு உணவளித்ததால் 8லட்சம் அபராதம்.. இளம்பெண்ணுக்கு கொடுத்த ஷாக்..!
8 lakh fine for feeding street dog
தெரு நாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு அபராதம் விதித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, நவி மும்பை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அன்சுசிங். இவர் அந்த பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு அவரின் இருந்த கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார்.
இதற்கு அந்த கட்டிட நிர்வாகம் தடை விதிக்கவே அந்த பெண் அதனை கண்டு கொள்ளாமல் தடையை மீறி உணவு வழங்கி வந்தார். இதனால், அந்த பெண்ணுக்கு தடையை மீறி கட்டிட வளாகத்தில் உணவு வழங்கியதற்காக அபராதம் விதித்தது.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் கடந்த ஜீலை மாதம் முதல் தற்போது வரை 8 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதுகுறித்து ஹவுசிங் காம்ப்ளக்ஸ் செயலாளர் வினிதா ஸ்ரீநந்தன், தெரிவிக்கையில், அந்த நாய்களால் குழந்தைகள், முதியவர்கள் நடமாட அச்சம் ஏற்படுவதாகவும் இரவுகளில் அவை ஊளைவிடுவதால் குடியிருப்புவாசிகளின் தூக்கம் கெட்டு வருவதாகவும் இதனை தவிர்க்கவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
8 lakh fine for feeding street dog