பயங்கரம் - சரக்கு வேன் மீது லாரி மோதி 8 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள குருருஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோகமேடியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதன் படி இந்த வாகனம் நேற்று நள்ளிரவு ஜிந்த் மாவட்டத்தின் ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த வழியாக வந்த லாரி, சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு இளம்பெண் உள்பட மொத்தம் எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்தனர். 

இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் யிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 peoples died in hariyana for accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->