நாகலாந்து: சிறையிலிருந்து 9 கைதிகள் தப்பி ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


நாகலாந்து மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 9 கைதிகள் இரும்பு கதவை உடைத்து தப்பி ஓடியுள்ளனர்.

நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 கைதிகள் நேற்று தப்பியோடி விட்டனர் என்று துணை மண்டல காவல் அதிகாரி அபோங்யிம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதில் 2 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும், மற்ற 7 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 கைதிகளும், சிறை அறையின் இரும்பு கதவு மற்றும் கைவிலங்கு சங்கிலியை உடைத்து சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

இதையடுத்து மோன் மாவட்ட நகர காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 prisoners escape from Nagaland jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->