வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்து..தாய்-மகள் பலியான சோகம்!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் தாய்,மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த தாய் ஜனதுன் நிஷா இவரது மகள் ஜகீனா  மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு 10 மணியளவின் வீட்டில் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள சாலையில்  வேகமாக வந்த கார் ஒன்று அந்த வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் மீது பயங்கரமாக  மோதியது.கார் வேகமாக மோதிய  இந்த சம்பவத்தில் நிஷா அவரது மகள் ஜகீனா சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அருகில் பேசிக்கொண்டிருந்த குடும்பத்தினர் 5 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் உடனடியாக இந்த விபத்து குறித்து விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.மேலும் காரை ஓட்டி இந்த விபத்தை ஏற்படுத்திய  ஒருவரை கைது செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விபத்தை ஏற்படுத்தி தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A car crashed into a group of people sitting outside the house Mother daughter death tragedy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->