வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு!
PMK Anbumani Ramadoss Vanniyar Chithirai Maanadu
வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மே 11ஆம் தேதி திருவிடந்தையில் நடைபெற உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் நோக்குடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாட்டை முன்னிட்டு கடந்த வாரம் பந்தக்கல் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர், பாட்டாளி சொந்தங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பாடல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாடலை வெளியிட்டார்.
"அழைக்கிறார், அழைக்கிறார், நம்ம அன்புமணி அண்ணன் நம்மை அழைக்கிறார்" என்ற வரிகளுடன் தொடங்கும் பாடல் தற்போது பரவலாக கவனம் பெற்றுள்ளது.
English Summary
PMK Anbumani Ramadoss Vanniyar Chithirai Maanadu