ரூ.30,000 கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.! கூலித்தொழிலாளி கொலை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 30 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கூலித்தொழிலாளியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரஞ்சித் குமார்(40). இவர் கண்ணன் (45) என்பவருக்கு ரூபாய் 30,000 கடன் கொடுத்துள்ளார். இதையடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் வாங்கிய கடனை கண்ணன் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இவர்களிடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன், அருகில் கிடந்த கல்லால் ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக ரஞ்சித் குமார் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ரஞ்சித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer was murder for demanding repayment of a loan of 30000 in Puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->