கர்நாடகாவில் அதிர்ச்சி; உள்ளூர் கிரிக்கெட்டின்போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொலை..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் நேற்று முன் தினம் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. அந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆட்டத்தின் போது மதியம் 03 மணியளவில் நபர் ஒருவர் 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் ஆத்திரமடைந்து அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக தாக்கியதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், கும்பல் தாக்கியதில் உயிரிழந்த நபரின் பெயர், வயது, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமா விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person who raised the slogan Long live Pakistan during a local cricket match in Karnataka was beaten to death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->