குவைத் தீ விபத்து : இறந்தவர்களின் உடல்களுடன் கொச்சி வந்து சேர்ந்த விமானம்..!! - Seithipunal
Seithipunal



வளைகுடா நாடான குவைத்தில் நேற்று முன்தினம் அதிகாலை இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆறு மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் இருந்த காவலாளி வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டு தீ வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியதால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் உயிரிழந்த 50 பேரில் 45 பேர் இந்தியர்கள். அவர்களில் 7 பேர் தமிழர்கள் என்று உறுதியானது. இந்நிலையில் தீ விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வருவதற்காக இந்திய வான்படையை சேர்ந்த விமானம் குவைத் சென்றிருந்தது 

இந்நிலையில் 31 இந்தியர்களின் உடல்களை சுமந்து வந்த வான்படை விமானம் கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்துள்ளது. முன்னதாக தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையம் சென்று எட்டு ஆம்புலன்ஸ்களுடன் காத்திருந்தார். 

கொச்சியில் இருந்து இறந்த 7 தமிழர்கள் மற்றும் ஒரு கர்நாடகாவை சேர்ந்தவர் என்று மொத்தம் 8 பேரின் உடல்களும் தனி தனி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Plane Arrived To Kochi Airport With Kuwait Fire Accident Victims


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->