முதல் முறையாக தாவர பூஞ்சையால் மனிதருக்கு நிகழ்ந்த பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!
a plant microbiologist from kolkatta infected by a fungus shocks medical world
கொல்கத்தாவைச் சார்ந்த நபர் தாவரப் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக ஒரு மனிதர் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
கொல்கத்தாவை சார்ந்த தாவர நுண்ணுயிர் நிபுணரான அவர் இருமல், விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்ற காரணங்களால் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அவரது தொண்டை பகுதியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அதில் சீழ் இருப்பது தெரிந்தது. அந்த
சீழ் மாதிரிகள் எடுக்கப்பட்டு உலக சுகாதார மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகி மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தாவரங்களில் வெள்ளி இலை நோயினை தோற்றுவிக்கும் காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியா என்ற பூஞ்சை தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தாவரங்களில் நோயை ஏற்படுத்தக் கூடிய ஒரு பூஞ்சையால் மனிதன் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகில் இதுவே முதல் முறை.
தாவரப் பூஞ்சைகளாலும் மனிதர்களை பார்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை இவரது தொற்றின் மூலம் மருத்துவ உலகம் அறிந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 61 வயதான அந்த நபர் இரண்டு மாதங்களாக பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டதால் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார்.
English Summary
a plant microbiologist from kolkatta infected by a fungus shocks medical world