மக்களே உஷார்! பரவும் நிபா வைரஸ்! வாலிபர் மரணம்!
A teenager died of Nipah virus fever in Kerala
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நிபா வைரஸ் மீண்டும் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2023 ஆம் ஆண்டு வரையில் நிபா வைரஸ் பாதித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் கடந்த வாரம் காலில் காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அங்குள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் அடுத்தடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் காய்ச்சல் குணமாகவில்லை என்பதால் பெரிய தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதனிடையில் கடந்த ஒன்பதாம் தேதி சிகிச்சை 12 அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உடல் பரிசோதனைக்காக கோழிக்கோட்டில் உள்ள அரசு வைரஸ் ஆராய்ச்சி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பரிசோதனையில் இறுதி அறிக்கையில் நிபா வைரஸ் பாதித்து இளைஞர் உயிர் இழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புனே ஆய்வகமும் நிபா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
A teenager died of Nipah virus fever in Kerala