குவைத் தீ விபத்து : பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரை காணவில்லை - உறவினர்கள் அச்சம்..!! - Seithipunal
Seithipunal



வளைகுடா நாடான குவைத்தில் நேற்று அதிகாலை ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த 40 பேரில் 3 தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஆதனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியான மனோகர் மற்றும் லதா தம்பதியரின் மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் (28)  என்பவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் குவைத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் தனது சொந்த கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள தங்களது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்காக இங்கு வந்திருந்த ரிச்சர்ட், கடந்த ஏப்ரல் மாதம் குவைத் திரும்பி உள்ளார். இந்நிலையில் நேற்று குவைத்தில் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தான் ரிச்சர்ட்டும் தங்கியுள்ளார் என்றும், அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு கைபேசியில் அழைத்தால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதே கட்டிடத்தில் தங்கி இருந்த அவரது நண்பர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை என்றும் ரிச்சர்ட்டின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் தங்கள் மகன் குறித்த எந்த ஒரு தகவலும் தெரியாமல் கவலையில் இருந்து வரும் எங்களுக்கு எங்கள் மகனை பத்திரமாக மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்தய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Young Man From Peravurani Missing in Kuwait Fire Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->