இனி இதற்கும் ஆதார் அவசியம் - மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சிறைக் கைதிகள் மற்றும் அவா்களுடைய பாா்வையாளா்களின் அங்கீகாரத்துக்காக ஆதாரைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன் படி, உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத் துறைகளுக்குத் தேவையான அரசிதழ் அறிவிப்புகளை கடந்த மாா்ச் மற்றும் செப்டம்பா் மாதங்களில் வெளியிட்டது.

இது தொடா்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"அனைத்து சிறை அதிகாரிகளின் வசதிக்காக சிறைக் கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களுக்கு ஆதாா் இணைப்பு அல்லது ஆதாா் அங்கீகாரத்துக்கான வழிகாட்டு நடைமுறையை தேசிய தகவல் மையமும், எண்ம-சிறைகள் குழுவும் தயாரித்துள்ளன.

இந்த ஆதாா் அங்கீகார வசதியைப் பயன்படுத்தி சிறைகளில் கைதிகளின் காவலை வலுப்படுத்தவும், ஆதாரின் உரிய பலன்களை அவா்கள் பெறுவதை உறுதி செய்யவும் மாநிலங்கள், யூனியன் பிரதேச சிறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

இருப்பினும், அங்கீகாரத்துக்காக ஆதாா் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் இந்த நடைமுறையில் மத்திய அரசு அவ்வப்போது வகுக்கும் அனைத்து வழிகாட்டுதல்களையும் சிறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadhar card must in watch accuest in jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->