ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க வேண்டுமா? - இதோ உங்களுக்காக..!
aadhar card update online free next three months
இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு இணையத்தளங்களில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:- இந்தியாவில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையிலும் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்த சேவை மார்ச் 15-ந்தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும். மக்கள் இந்த சேவையை 'my Aadhaar' எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். இதுவே, ஆதார் மையங்களில் சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும், பயனாளர்கள் 'myaadhaar.uidai.gov.in' எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
aadhar card update online free next three months