கொலையா? தற்கொலையா?...ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியின் மகள் கனடாவில் மர்ம மரணம்...! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த 'ஆம் ஆத்மி கட்சி' நிர்வாகி 'தேவேந்தர் சிங்' என்பவர். இவரது மகள் 21 வயதான வன்ஷிகா என்பவர்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்று ஒட்டாவாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்று வந்தார்.இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

வாடகைக்கு வேறு  வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் தெரிவித்துவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.இவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் காவலில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை கனடா காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.இதில்  4 நாட்களாக தொடர்ந்து தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உடல் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. இதில் வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aam Aadmi Party executive daughter dies mysteriously Canada


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->