சூப்பர்!!! தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் 'விஜய பிரபாகரன்'....!!!
Vijayakanth eldest son Vijaya Prabhakaran secretary DMDK Youth Wing
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் 'பிரேமலதா விஜயகாந்த்' தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று இருந்தனர்.இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் 'விஜய பிரபாகரன்' நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கட்சியின் தலைமை நிலைய செயலாளராக 'பார்த்தசாரதி' நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தற்போது வரவேற்கும் விதமாக அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.மேலும் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vijayakanth eldest son Vijaya Prabhakaran secretary DMDK Youth Wing