தேர்வெழுத சென்ற 17 வயது மனைவி.. கணவன் வெறி செயல்.. மேற்குவங்கத்தில் நடந்த கொடூரம்..!
Acid attack on 17 year old wife
17 வயது மனைவி மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம், பிர்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் கீதா ஆருணி (17). இதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் நடைபெற்றதால் கீதா தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார். குழந்தைகள் பிறந்ததும் படிப்பை தொடர முடியவில்லை.
இதனிடையே பள்ளி ஆசிரியர்களின் உதவியா கடந்த ஆண்டு மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பள்ளிப் படிப்பை கைவிடுமாறு கீதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீதா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ளது. அவரை தொடர்பு கொண்டு அவரது கணவர் ரமேஷ் தேர்வு மையம் குறித்து விவரம் பெற்றுள்ளார். காலையில் அங்கு சென்ற அவர் தேர்வு எழுத வேண்டாம் வீட்டிற்கு வந்து விடுமாறு தெரிவித்துள்ளார் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு இதுதான் கடைசி தேர்வு கட்டாயம் எழுதிவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்திருந்த ஆசிட்டை அவர் மீது வீசியுள்ளார். படுகாயம் அடைந்த கீதாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Acid attack on 17 year old wife