இந்திய குடியுரிமை பெற்ற பின்... முதல் வாக்கை செலுத்திய பிரபல நடிகர்.!
actor Akshay Kumar vote
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நீண்ட நாட்களாக கனடா குடியுரிமை வைத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய குடியுரிமையை பெற்றார்.
இந்நிலையில் இந்திய குடிமகனாக தனது முதல் வாக்கினை இன்று மும்பையில் நடிகர் அக்ஷய்குமார் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
இந்தியா வளர்ச்சியடையவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனை மனதில் வைத்து எனது வாக்கை செலுத்தி உள்ளேன்.
மக்கள் தங்களுக்கு யார் சரியானவர்கள் என்று யோசித்து வாக்களிக்க வேண்டும். வாக்கு பதிவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 49 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.